ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

<>தொடுவானம் செய்திகள்<>

தினமலர் செய்தி

                                                               தினமணி செய்தி

Download As PDF

வெள்ளி, 8 ஜனவரி, 2010

<>"தொடுவானம்" இணைய பயிலரங்கு<>

நாமக்கல்லில் "தொடுவானம்" இணைய பயிலரங்கு - கிராம மக்களிடம் வரவேற்பு

Monday, 21 December 2009

நாமக்கல், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் "தொடுவானம்" எனும் பெயரில் இணைய பயிலரங்கு நடைபெற்றது. இந்த பயிலரங்கில் கிராம தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம தன்னார்வலர்களுக்கான இணைய பயிலரங்கு நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சகாயம் பயிலரங்கினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.



அப்பொழுது அவர் பேசியதாவது:-

கிராமங்களின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் கிராம வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.அதன் அடிப்படையில் உழவர் சந்தைகளில் உழவன் உணவகம், கிராம குறை தீர் மன்றங்கள் மூலம் கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இம்மாவாட்டத்தில் 25 கிராமங்களி தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் பொதுமக்களின் மனுக்கள் தமிழில் இணையம் மூலமாக எனக்கு அனுப்பி வைத்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்திற்கு 5 நபர்கள் வீதம் 25 கிராமங்களுக்கும் சேர்த்து 125 தன்னார்வலர்கள் இன்று பயிற்சி பெறுகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் கிராம மக்களுக்குமான இடைவெளியை குறைத்து உடனுக்குடன் குறைகள் நிவர்த்தி செய்வதாகும். இணையம் ஊடாக மனுக்கள் அனுப்பப்படும் போது நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருக்கும் உடனடியாக பிரச்சனைகள் சம்பந்தபட்ட துறை அலுவலர் மூலம் தீர்க்கப்படுகிறது. எனவே இந்த இணைய வசதியினை அந்த கிராம மக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இங்கு வந்துள்ள் வல்லுநர் குழுவும் உங்களுக்கு புரியும் வகையில் பயிற்சி வழங்குவார்கள் என பேசினார்.




நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் பயிலரங்கு நடைபெற்றது
பயிலரங்கில் தகவல் தொடர்பில் வலைப்பூ எனும் தலைப்பில் காசி ஆறுமுகம் அவர்களும், எளிய பயிற்சியும் தகவல் தொடர்பும் எனும் தலைப்பில் கோபாலகிருஷ்ணனும்( ஹாய்கோபி), பயனரின் பார்வையில் வலைப்பூ எனும் தலைப்பில் சஞ்சய்காந்தியும், ஒரு அதிகாரியின் பார்வையில் வலைப்பூ எனும் தலைப்பில் நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் (லதானந்த்) அவர்களும், மின்னியல் நிர்வாகம் குறித்து மாவட்ட தகவலியல்(NIC) துறை அதிகாரி செல்வகுமார் , தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பயன்பாடும் எனும் தலைப்பில் வழக்கறிஞர் மார்டின் அவர்களும் விளக்கவுரையாற்றினர். இதனை அடுத்து காணொளியூடாகா பிரான்சிலிருந்து பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூரிலிருந்து மணியம், லண்டனிலிருந்து பேராசிரியர் சிவாபிள்ளை, மலேசியாவிலிருந்து இளந்தமிழ், ஆஸ்திரேலியாவிலிருந்து முகுந்தராசு,அமெரிக்காவிலிருந்து ஆல்பர்ட் பெர்ணான்டோ ஆகியோர் வாழ்த்து செய்தி வழங்கினர்.



தகவல் தொடர்பில் வலைப்பூ எனும் தலைப்பில் காசி ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்

இதனைத் தொடர்ந்து அரங்கில் திரண்டிருந்த கிராம தன்னார்வலர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள்,ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி உதவியாளர்கள் ஆகியோருக்கு மென்பொருள் வல்லுனர் கோபாலகிருஷ்ணன் பயிற்சிகளை வழங்கினார். இந்த பயிலரங்கில் கணினியின் பயன்கள், இணையத்தின் பயன்கள், கணினியில் தமிழ், வலைப்பதிவுகளின் பயன்கள், யுனிகோட் தமிழ் தட்டச்சு பயிற்சி, இணையம் ஊடாக ஆட்சியருக்கு ஆலோசனைகள் மற்றும் புகார்கள் தெரிவிப்பதற்கான பயிற்சிகள், காணொளியின் அவசியம் மற்றும் பயன்கள் ஆகியன குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.

எளிய பயிற்சியும் தகவல் தொடர்பும் எனும் தலைப்பில் கோபாலகிருஷ்ணனும்( ஹாய்கோபி) சிறப்புரையாற்றினார்,


ஒரு அதிகாரியின் பார்வையில் வலைப்பூ எனும் தலைப்பில் நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் (லதானந்த்) பேசினார்.
இந்த பயிற்சியில் தமிழ்வணிகம்.காம் செல்வமுரளி கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சிகள் வழங்கினார்.பயிற்சியின் முடிவில் ஆட்சியர் சகாயம் காணொளி ஊடாக நான்கு கிராமங்களை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.





தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பயன்பாடும் எனும் தலைப்பில் வழக்கறிஞர் மார்டின் அவர்கள் சிறப்புரையாற்றினார்
இந்த பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை சிரஸ்தார் சுப்ரமணியம், என்.ஐ.சி அதிகாரி செல்வகுமார் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சி நிறைவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்ரமணியம் நன்றியுரையாற்றினார்.மேற்கண்ட பயிலரங்கு நிகழ்ச்சிகளை அமெரிகாவிலிருந்து ஆல்பர்ட் அவர்கள் ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.


பயிற்சி முடிவில் பயிலரங்கில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் மிக ஆர்வமாக தமிழ் தட்டச்சு முறைகளை கேட்டறிந்து கற்றுக் கொண்டதுடன் தமிழ் இணையம் குறித்தும் பயிற்றுனர்களுடன் கலந்துரையாடினார்கள்.

பயனரின் பார்வையில் வலைப்பூ எனும் தலைப்பில் சஞ்சய்காந்தி சிறப்புரையாற்றினார்



நன்றி:சங்கமம் இணைய இதழ்
Download As PDF

<>தொடுவானம் துவக்க விழா<>

நாமக்கல் மாவட்டத்தில் துவக்கப்பட்ட தொடுவானம்
இணையம் மூலம் குறை தீர் துவக்க விழா





நன்றி :- சங்கமம் இணைய இதழ் ஆசிரியர் திரு. விசயகுமார்.

Download As PDF

<>தொடுவானம் பயிற்சி,நாமக்கல்<>

            >தொடுவானம்<
                                    கிராமத் தன்னார்வலர்களுக்கான
                                        இணையப்பயிலரங்கம் பகுதி-1





                                                             <>தொடுவானம்<>


கிராமத் தன்னார்வலர்களுக்கான


இணையப்பயிலரங்கம் பகுதி-2




நன்றி :- சங்கமம் இணைய இதழ் ஆசிரியர் திரு. விசயகுமார்.
Download As PDF